Connect with us
Saturday, March 28, 2026

பராசக்தி படம் எப்படி இருக்கு.. பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

பராசக்தி விமர்சனம்

சுதா கொங்கரா இயக்கத்தில், 1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பராசக்தி திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தியாவில் இன்று காலை 9 மணிக்கு படம் திரையரங்குகளில் வெளியாக, வெளிநாடுகளில் ஏற்கனவே அதிகாலை மற்றும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பெரும்பாலான விமர்சனங்கள் கலவையானவை. சிலர், “ஜெயம் ரவி வில்லனாக அசத்தியிருக்கார். அதர்வாவுக்கு இது கெரியரில் சிறந்த கதாபாத்திரம். ஆனா சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ போல ஒரு டம்மி ரோலில் தேங்கிட்டார். இரண்டாம் பாதி மிக நீளமாகவும், காட்சிகள் முன்கூட்டியே கணிக்கக்கூடியவையாகவும் இருக்கு. பிலோ ஆவரேஜ்… 5-க்கு 1.5 மதிப்பெண்” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“ஒரே ஒரு போட்டோ தான்…!” – கேலி செய்தவர்கள் கப்சிப்! நிவேதா தாமஸின் சேலை லுக்“ஒரே ஒரு போட்டோ தான்…!” – கேலி செய்தவர்கள் கப்சிப்! நிவேதா தாமஸின் சேலை லுக்

மற்றொரு பார்வையாளர், “சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜெயம் ரவியின் பாத்திரம் நல்லா இருந்தாலும், மொத்தத்தில் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிலர் நேர்மறையான கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். “படம் நன்றாகவே இருக்கு. இடைவேளை காட்சி சிறப்பு. சிவகார்த்திகேயன் செட்டிலாக நடிச்சிருக்கார். அதர்வாவின் காட்சிகளும், பாடல்களும் நல்லா இருக்கு” என்று ஒருவர் பாராட்டியுள்ளார்.

ஆனால், பல வெளிநாட்டு பார்வையாளர்கள் நெகட்டிவ் கருத்துகளை முன்வைத்துள்ளனர். “பராசக்தி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் அப்படி ஒன்றும் காட்டவில்லை. 1960-களின் சூழலுக்கு ரசிகர்களை கொண்டு செல்ல முயற்சி செய்தாலும், அது வேலை செய்யவில்லை. ரசிகர்கள் நிகழ்காலத்திலேயே தொங்கிக் கிடக்கிறார்கள் – அதுதான் பெரிய மைனஸ்” என்று ஒரு விமர்சனம் குறிப்பிடுகிறது.

“காந்தாரா” கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்“காந்தாரா” கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்

மேலும், “காமெடி காட்சிகள் வொர்க் அவுட் ஆகலை. எமோஷனல் காட்சிகளுக்கு எந்த தாக்கமும் இல்லை. நல்ல கன்டென்ட் இருந்தாலும், சொல்லிய விதம் சரியில்லை” என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் எதிர்வினைகள் அடிப்படையில், பராசக்தி வெற்றிப்படமாக அமையுமா என்பது இன்று மாலைக்குள் தெளிவாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top