14 வயது சிறுவனிடம் 4 மாதங்களாக தகாத உறவு… இரு வாலிபர்கள் கைது!

தகாத உறவு

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது மொய்தீன் மற்றும் 25 வயது ஜாபர் சாதிக் ஆகியோர், 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கடந்த 4 மாதங்களாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இச்செயலை யாரிடமும் கூற வேண்டாம் என சிறுவனிடம் அச்சுறுத்திய இவர்கள், அவனுக்கு உணவு மற்றும் செல்போன் வாங்கிக் கொடுத்து, தங்கள் சொல்லை மட்டும் கேட்கும்படி செய்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், பாலியல் குழந்தை பாதுகாப்பு (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.