ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக யுவ்ராஜ் சிங்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளரா? விவரம் இதோ!

யுவ்ராஜ் சிங் ஐபிஎல் பயிற்சியாளர்

சென்னை, நவம்பர் 15: இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஆண்டுதோறும் ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

2026 ஐபிஎல் தொடருக்கான ஆயத்தப் பணிகள்: மினி ஏலம் மற்றும் புதிய மாற்றங்கள்!

2025 ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது அடுத்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு ஐபிஎல் அணிகளிலும் முக்கிய மாற்றங்கள் பல நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஒரு அதிரடி செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான யுவ்ராஜ் சிங், ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யுவ்ராஜ் சிங்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளரா?

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகாலம் அனுபவம் கொண்ட யுவ்ராஜ் சிங், ஒரு சில சீசன்களில் அணிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அவ்வப்போது இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க : நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா: தனி ஆளாக நின்று மிரட்டல் ஆட்டம்! இந்தியாவின் தோல்விக்கிடையிலும் ஜொலித்த நட்சத்திரம்!

இந்நிலையில், தற்போது முழுநேர பயிற்சியாளராக மாற இருக்கும் யுவ்ராஜ் சிங், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோ அணியின் நிர்வாக தலைவரான சஞ்சீவ் கோயங்கா, யுவ்ராஜ் சிங்கை தலைமை பயிற்சியாளராக கொண்டு வர அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் சம்மதித்தால், யுவ்ராஜ் சிங் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ஒரு தலைமை பயிற்சியாளராக களமிறங்குவார். பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net