ஐபிஎல் தொடரின் மும்பை- குஜராத் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.
இந்தநிலையில் போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார்.
பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடத் தொடங்கிய நிலையில், சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, கொண்டாடினார்.