இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் எதற்கு… கவாஸ்கர் காட்டம்!

பகிர்
விளம்பரம்

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் இல் அதிக தொகைக்கு ஏலம் போன இளம் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்திய அணிக்காக ஆடி இருப்பார்கள். அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர்களுக்கு பல கோடிகள் கிடைத்துள்ளதுடன், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை.

இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் எதற்கு… கவாஸ்கர் காட்டம்!
படம்: இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் எதற்கு… கவாஸ்கர் காட்டம்!

உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களின் ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது நல்ல விஷயம்தான். எனினும், ஒரு வரைமுறை வேண்டும். அதிக போட்டிகளில் ஆடுவோருக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால், நாக் அவுட்டுக்கு செல்லும் அணியின் வீரர்களுக்கு அதிக தொகையை ஊதியமாக கொடுக்க வேண்டும். காயமடைவதை போல ஓய்வெடுத்து ஐ.பி.எல்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களை குறைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்