நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனி திருமணம் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் இன்று காலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருமணம் மிக எளிமையாக நடைபெற்றதாகவும், இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா, மகன் ராம்சரண் உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
வரும் 8ஆம் தேதி நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி, ஜைனப் என்ற பெண்ணை காதலித்த நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
அகிலை விட ஜைனப் ஒன்பது வயது மூத்தவர் என்றும் அகிலுக்கு 30 வயது, ஜைனப்பிற்கு 39 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்
யுபோரியா (Euphoria – 2026) தமிழ் மூவி ரிவியூ: உண்மைச் சம்பவத்தின் உக்கிரமான திரைக்கதை!
3,000 ஆண்டுகள் பழமையான நகையா? ஹாலிவுட் நடிகை ஜெண்டயாவுக்குக் குவியும் கண்டனங்கள்!
60 வயதில் Facebook காதலரை மணந்த பிரபல நடிகை! 75 நாட்களில் காதல் – 15 ஆண்டுகள் சந்தோஷம்!
கிளாமர் குயின் சன்னி லியோன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
’24 மணி நேரமும் அதனை செய்ய விருப்பமில்லை ’ – நடிகை சோபிதா துலிபாலா
Powered By Infox Cloud⚡





