Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

காதலர் தினம் குறித்து இலங்கை பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

உலகம் முழுவதும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காதலர் தினத்தன்று இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுதல், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், மோசடிகளில் ஈடுபடுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என்றும், காதலர் தினத்தன்று இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களிலிருந்து இளைஞர், யுவதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு 119 என்ற இலகத்தின் ஊடாக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles