Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

கவுதமலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

கவுதமலாவில் நேற்று முன் தினம் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தின் மீது பயணித்த அந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்கு உள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் பஸ் விபத்துக்கு உள்ளானது.

கவுதமலா பஸ்

இந்த நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கவுதமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles