Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு – வெளியான அறிவிப்பு

இலங்கையில் இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதையை மின் நிலைமையை அடுத்து இந்த மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை கூறியுள்ளது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles