Tuesday, July 22, 2025

Top 5 This Week

Related Posts

டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஜஸ்பிரிட் பும்ரா

2024 ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த ஆடவருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வென்றுள்ளார்.

பரிந்துரை பட்டியலில் ஜஸ்பிரிட் பும்ராவுடன் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் தென் ஆபிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஜஸ்பிரிட் பும்ரா 14.22 என்ற சராசரி வீதத்தில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்தத் தொடரின் போது அவர் தமது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

20க்கும் குறைவான சராசரி வீதத்துடன் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆவார்.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles