ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் இல் அதிக தொகைக்கு ஏலம் போன இளம் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்திய அணிக்காக ஆடி இருப்பார்கள். அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர்களுக்கு பல கோடிகள் கிடைத்துள்ளதுடன், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை. உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களின் ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது நல்ல விஷயம்தான். எனினும், ஒரு வரைமுறை வேண்டும். அதிக போட்டிகளில் ஆடுவோருக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால், நாக் அவுட்டுக்கு செல்லும் அணியின் வீரர்களுக்கு அதிக தொகையை ஊதியமாக கொடுக்க வேண்டும். காயமடைவதை போல ஓய்வெடுத்து ஐ.பி.எல்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களை குறைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Author: இணையதளச் செய்திப் பிரிவு
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கிய நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. விதானசவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டதுடன், பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்தனர். அத்துடன், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க இலவச பாஸ் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்ற வதந்தி பரவியதால், லட்சக்கணக்கானோர் பாஸ் பதிவிறக்கம் செய்து ஸ்டேடியத்துக்கு திரண்டனர். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர் கேலரியில் உள்ள 35,000 இருக்கைகளில்5 ஆயிரம் இருக்கைகள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், வி.ஐ.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. 30 ஆயிரம் இருக்கைகள்…
இந்தநிலையில் போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டத. இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய 8 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் மியான் மொஹமட் ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பாகிஸ்தான்…
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து, ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை ஓரம்கட்ட பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த நிலையில், விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், கோலின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், விராட் கோலி…
மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்த நிலையில், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப்பெற்றமை குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில்:- சிஎஸ்கே அணியை பற்றி சொல்லி சொல்லி மிகவும் சோர்வடைந்து விட்டேன். இந்தப் போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என மீட்டிங்கின் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் சொன்னேன். அதன்படி அணிக்கு வெற்றியை தேடி தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்றார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று(21) நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அத்துடன், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3இல் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின. இந்த நிலையில், வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் ஆகியோர் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்த நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோபமடைந்தது. இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு விளக்கம் அளித்து அறிக்கை அனுப்பியது. அதில், ஐபிஎல் விதிமுறைகளின் படிதான் தாங்கள் மைதானங்களை தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும்…
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் குவிண்டன் டி காக் (Quinton de Kock) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு (RR) எதிராக கவுஹாத்தி மைதானத்தில் 61 பந்துகளில் 97 ரன்கள் அடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் கவுஹாத்தி மைதானத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கவுஹாத்தி மைதானத்தின் புதிய ரன் மன்னர்! டி காக்கின் 97 ரன்கள் கவுஹாத்தி மைதானத்தில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர். முந்தைய சாதனை: 2023ல் ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்) 86 ரன்கள். 90+ ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் டி காக் படைத்துள்ளார். கவுஹாத்தி மைதானத்தின் அதிக ரன் வீரர்கள் (Top Scorers) ஜோஸ் பட்லர் (RR) 98 ரன்கள் 2 போட்டிகள் குவிண்டன் டி காக் (KKR) 97 ரன்கள் 1 போட்டி…
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் லீஜெண்டரான எம்.எஸ். தோனி (MS Dhoni) இந்த ஆண்டு 2025 ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதம் அணியின் புதிய இளம் வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 43 வயது நிரம்பிய தோனி, தனது பேட்டிங் பயிற்சியில் இளம் வீரர்களை விட அதிக சிக்ஸர்கள் அடித்து, அவர்களின் கண்களை வியப்பால் விரிய வைத்திருக்கிறார். CSK அணியில் இந்த ஆண்டு புதிதாக இணைந்த வீரர்கள் (தீபக் ஹூடா, நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அஹமது போன்றோர்) தோனியின் பயிற்சி முறைகளை கண்டு மலைத்துள்ளனர். குறிப்பாக, அவர் இதுவரை விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுக்கவில்லை என்பதே அவர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. தோனி கடந்த 3 ஐபிஎல் பருவங்களாக முழங்கால் காயம் மற்றும் பேட்டிங் பின்னடைவால் போராடினார். 2024 ஐபிஎல்-ல் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய முடியாமல், விக்கெட் கீப்பிங்கில் சில தவறுகள் செய்தார். ஆனால், 2025…
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது. ஆட்டத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார். அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் 2025 – சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியதுடன், ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையும் படியுங்கள்: திடீரென மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்… 3ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? ருதுராஜ் விளக்கம்! இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்ததுடன், 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி…