Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (Zendaya), தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தொல்பொருட்களால் செய்யப்பட்ட காதணிகளை ஆடை அலங்காரமாக அணிந்து வந்ததற்காக தற்போது சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படத்தின் விளம்பர தூதுவர் (Promotion) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெண்டயா லண்டன் வந்திருந்தார். இந்த நிகழ்வின் போது, அவர் ஒரு பிரத்தியேகமான வெள்ளை நிற ஜாக்மஸ் (Jacquemus) ஆடையும், அதற்குப் பொருத்தமாகப் பண்டைய ஈரானிய தங்கப் பதக்கங்களால் வடிவமைக்கப்பட்ட அரிய காதணிகளையும் அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். நெருக்கடிக்குக் காரணமான இந்தக் காதணிகள், கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரானிய தொல்பொருட்களை (Artifacts) உருமாற்றி உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுக்கிறது. ஒரு நாட்டின் கலாசாரப் பாரம்பரியமிக்க மற்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை, ஒரு பிரபலத்தின் தற்காலிக ஆடை…

Read More

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று இந்தக் காப்பகக் கட்டடத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் போது காப்பக அறைகளுக்குள் சிக்கிக்கொண்ட 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி 19 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏசி மின்…

Read More

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றின் சஞ்சாரம் மற்றும் பிற கிரகங்களுடன் உருவாகும் நிலைகள், மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றன. இதற்கிடையில் சூரியன், குரு, சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய முக்கிய கிரகங்கள் ராகு-கேதுவிற்கு இடைப்பட்ட அமைப்பில் இருந்ததாக ஜோதிடர்கள் விளக்குகின்றனர். இந்த அமைப்பு காரணமாக சிலருக்கு மனஅழுத்தம், தாமதங்கள், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் தொழில் தொடர்பான தடைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 19 அன்று சந்திரன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பெயர்ச்சியடைகிறது. இதன் மூலம் ராகு-கேதுவிற்கு இடையில் இருந்த கிரக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, சில ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொடர்பாடல் மற்றும் பேச்சு…

Read More

இன்று ஜூலை 18, 2026 – ஜோதிட உலகில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இது கருதப்படுகிறது. காரணம், இரண்டு முக்கியமான ராஜயோகங்கள் ஒரே நாளில் உருவாகியுள்ளன. பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ‘ஹன்ஸ் ராஜயோகம்’ மற்றும் புகழ்பெற்ற ‘கஜகேசரி ராஜயோகம்’ ஆகிய இரண்டும் இன்று ஒருங்கிணைந்து உருவாகியுள்ளன. குரு பகவானின் ஆதிக்கத்தில் உருவான ஹன்ஸ் யோகம் அறிவு, மரியாதை, மற்றும் நிதி சிறப்பையும், குரு – சந்திரன் கூட்டணியில் உருவான கஜகேசரி யோகம் மகிழ்ச்சி, மனநிறைவு, மற்றும் செழிப்பையும் வழங்குவதாக கருதப்படுகிறது. இந்த அரிய கூட்டமைப்பு 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு மட்டும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசி இன்று உருவான இந்த இரட்டை யோகங்களின் முதல் பயனாளிகள் மேஷ ராசிக்காரர்கள். உங்களது தொழில் மற்றும் பணியிடத்தில் சிறப்பான காலமாக இது அமையும். உங்களது உழைப்பும் செயல்திறனும் மேலதிகாரிகளின்…

Read More

தமிழ் ஆண்டின் முக்கியமான மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடுகளுக்கு சிறப்பு பெறும் இந்த காலத்தில், கிரக நிலைகளும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2026 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் சூரியன், குரு மற்றும் புதன் கடக ராசியில் இணைந்து பயணிப்பதால், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில், பொருளாதாரம், குடும்பம், கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேஷம் தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறக்கூடும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் லாபத்தை அதிகரிக்கும். இருப்பினும், எதிரிகளின்…

Read More

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், காதல், திருமணம், கலை, அழகு மற்றும் சுகபோக வாழ்க்கையின் காரகராகக் கருதப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் வசதிகளை வழங்கும் முக்கிய கிரகங்களில் சுக்கிரனும் ஒருவர். பொதுவாக சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாறுவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். சுக்கிரனின் இந்த மாற்றங்கள் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான், ஜூலை 29, 2026 அன்று உத்திரம் (உத்தர பல்குனி) நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். ஆகஸ்ட் 11 வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால், இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், குடும்பம் மற்றும் உறவுகளில் சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ரிஷபம், மிதுனம், சிம்மம் மற்றும்…

Read More

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2026 ஜூலை மாதம் முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறும் காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்களது ராசிகளை மாற்றுவதால் பல்வேறு சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ஜூலை 16 மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. காரணம், அன்றைய தினம் சூரியன் கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அதே நேரத்தில் சந்திரன் சிம்ம ராசிக்கு பெயர்கிறார். இந்த இரு கிரகங்களின் ராசி மாற்றத்தால் பரிவர்த்தன யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் பரிவர்த்தன யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ராசி அமைப்பில் அமையும் போது உருவாகும் சக்திவாய்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் வாழ்க்கையின் பல துறைகளில் நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்த யோகம்…

Read More

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பக  வான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும். ஆனால் கடக ராசி குரு பகவானின் உச்ச ராசி என்பதால், அதன் முழுமையான பலம் குறைந்துவிடாது. மாறாக அதனால் கிடைக்கும் நன்மைகள் சற்று தாமதம் ஏற்படும். அப்படி குரு பகவான் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான காலமாக இருக்கும். இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு…

Read More

வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுபவர் குருபகவான் (வியாழன்). ஞானம், செல்வம், கல்வி, திருமணம், குழந்தைப் பாக்கியம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றின் காரகராக குரு பகவான் போற்றப்படுகிறார். எனவே, குருவின் பெயர்ச்சி அல்லது நட்சத்திர மாற்றம் ஒவ்வொரு முறையும் ஜோதிட உலகில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி குருபகவான் பூசம் (புஷ்யம்) நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைகிறார். ஜோதிட ரீதியாக இந்த மாற்றம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பூசம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் மிகவும் சிறப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுவதுடன், வளர்ச்சி, செல்வ வளம், அறிவு, கௌரவம் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை குறிக்கும் நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகிறது. குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக மேஷம், கடகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிகளவு சாதகமான பலன்களை வழங்கும்…

Read More

உலகம் முழுவதும் பேசப்படும் தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்காவின் பெயரில் பல்வேறு கணிப்புகள் அடிக்கடி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றில் சில பின்னர் உண்மையாகியதாக பலரும் கூறினாலும், பல தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாதவையாகவும் உள்ளன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என பாபா வங்கா பெயரில் தற்போது பரவி வரும் தகவல்கள் கவனம் பெற்று வருகின்றன. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கு ராசிகள் குறித்து பார்க்கலாம். மிதுனம் 2026-ன் இரண்டாம் பாதி மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலமாக அமையலாம் என்று கூறப்படுகிறது. தொழில் மற்றும் போட்டி நிறைந்த துறைகளில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை நிறைவு செய்யும் சூழல் உருவாகலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கக்கூடும். பொருளாதார…

Read More

ஜூலை மாதத்தில் நிகழப்போகும் மிக முக்கியமான கிரக மாற்றங்களால், ஜோதிட ரீதியாகப் பல சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகவுள்ளன. குறிப்பாக, ஜூலை 16, 2026 அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாகிறார். ஏற்கனவே கடக ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், அங்கு சூரியன்-குரு சேர்க்கை நிகழ்கிறது. வேத ஜோதிடத்தில் இந்த சேர்க்கையானது மிகவும் மங்களகரமான ‘மகாலட்சுமி ராஜயோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய கிரக அமைப்பால் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த செழிப்பைப் பெற்று, குதிரை வேகத்தில் முன்னேறப் போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று இங்கு காண்போம். மேஷம் சூரியன் மற்றும் குருவின் இந்தச் சேர்க்கை மேஷ ராசியினருக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகக் அமையப்போகிறது. இக்காலத்தில் உங்களின் வாழ்க்கை தரம் மற்றும் வசதிகள் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது புதிய நல்ல வேலைவாய்ப்புகள் தேடி வரும்.…

Read More

இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 அணி, தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் இன்று (ஜூலை 9) பிரிஸ்டலில் நடைபெறும் நான்காவது டி20 போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரில் மீண்டும் கால் பதிக்க முடியும் என்ற நிலையில், இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அபார சூழலில், அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான அக்சர் படேலுக்கு இன்றைய ஆட்டம் மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக அமைகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வரும் அக்சர், இதுவரை 99 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்று அவர் தனது 100வது டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார். இதன்மூலம், இந்திய சார்பில் 100 டி20 போட்டிகளுக்கு…

Read More