விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாக தயாரான நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப் படத்தையும் தான் இயக்கப் போவதில்லை என்றும், படங்களில் நடிக்க போவது இல்லை என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடுவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனனும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.