Connect with us
Monday, April 20, 2026

பண்ணை வீட்டில் நள்ளிரவில் அழகி செய்த வேலை! நாயால் வெளிவந்த ரகசியம்! பியூட்டி குயின் கைது!

பண்ணை

பிரேசிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கடத்தல் வழக்கில், முன்னாள் அழகிப்போட்டி பட்டம் வென்ற ஒருவரின் தொடர்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. Sara Monteiro என அடையாளம் காணப்பட்ட இந்த பெண், 2025ஆம் ஆண்டு “Miss Uberlândia” பட்டம் பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

Brasília நகரத்தை மையமாகக் கொண்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் São Paulo உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரமாண்ட வாழ்க்கை முறை காட்டி வந்த இவர், உண்மையில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வலையமைப்புடன் தொடர்புடையவர் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதிகாரிகள் “Operation Luxury” என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ் அவரை கண்காணித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு பண்ணை வீட்டிற்கு அருகில் நாயுடன் சென்றிருந்த சம்பவம், அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முக்கிய ஆதாரமாக அமைந்தது.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை பகிரங்கமாக உறுதிப்படுத்திய கேத்தி பெர்ரிகனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை பகிரங்கமாக உறுதிப்படுத்திய கேத்தி பெர்ரி

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் சுமார் 5.9 டன் கஞ்சா மற்றும் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் சாராவுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய ஆடம்பர வாழ்க்கை, சட்டவிரோத வருவாயால் ஆதரிக்கப்பட்டது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பிரேசில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

To Top