உலகப் பேரழிவு நெருங்குகிறதா? ஈஸ்ரேல்–ஈரான் போர் மற்றும் பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்

பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீண்டகாலம் நீடித்து வரும் மோதல், பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒருங்கிணைந்த ராணுவ தாக்குதலால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் அறிவித்துள்ளது; சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து தாக்கல் செய்யும் வாய்ப்பும் உள்ளது. இதனால் உலக நாடுகள் இடையே பதற்றம் பெருகி வருகிறது.

இந்த சூழலில், பல்கேரியாவைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற தீர்க்கதரிசர் பாபா வாங்காவின் கணிப்புகள் மீண்டும் பரவி வருகிறது. பார்வை மாற்றத்தால் சிறு வயதில் சக்தி பெற்ற பாபா வாங்கா, 5079ஆம் ஆண்டுவரையிலான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தார். அவருடைய முன்னறிவிப்புகளில் 2026ஆம் ஆண்டு உலகின் கிழக்கு அல்லது ஐரோப்பிய பகுதிகளில் பெரிய போர் வெடிக்கும் வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபா வாங்கா முன்கூட்டியே கூறியதாவது, இந்த மோதல் உலக நாடுகளின் எல்லைகளை மாற்றும், மேற்கு நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பாவிலும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாகும். இதனால் உலக நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்வர்.

மேலும், இவரது கணிப்பின்படி, இந்த மோதலுக்குப் பிறகு உலக அரசியல் சக்தி சமநிலையிலே மாற்றம் ஏற்பட்டு, ரஷ்யா முக்கியமான உலக சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரின் உலக அரசியலில் பெரும் செல்வாக்கும், முக்கிய ஆதிக்கமும் உருவாகும் என்றும் பாபா வாங்கா முன்கூட்டியே கூறியுள்ளார்.

இதனால், 2026ஆம் ஆண்டு உலகப் போர், பொருளாதார பதற்றம் மற்றும் அரசியல் மாற்றங்களால் உலக நாடுகள் முக்கியமான சவால்களை எதிர்கொள்வதாக பாபா வாங்காவின் கணிப்புகள் அடையாளம் காணப்படுகின்றன.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net