இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) மற்றுமொரு ஈரான் கப்பல் காணப்படுவதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் கப்பல் தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்புச் சபை மற்றும் அரசாங்கம் முழுமையாக அறிந்துள்ளதாக இதன்போது அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த கப்பல் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் இல்லை என்றும், அது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (Exclusive Economic Zone) இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கப்பலில் உள்ளவர்களின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகின்றதோடு, பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிராபத்துகளைத் தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


