ஈரானுக்கு கடும் எதிர்ப்பு: மத்திய கிழக்கில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ‘மெகா’ மீட்பு நடவடிக்கை!

ஈரானுக்கு கடும் எதிர்ப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள தனது நாட்டு குடிமக்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் பாரிய மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா இந்த போரில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

கடும் அதிருப்தி: ஈரான் உச்ச தலைவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சில மசூதிகளின் செயலுக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், ஈரானின் தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

6 அவசரக் குழுக்கள்: வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் தவிக்கும் சுமார் 1,15,000 ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில், ஆறு அவசரகால உதவிக் குழுக்களை (Emergency Assistance Teams) ஆஸ்திரேலியா களமிறக்கியுள்ளது.

முதல் கட்ட மீட்பு: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்புடன், துபாயிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வணிக விமானம் தற்போது சிட்னி நோக்கிப் புறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புக் குழுவினரின் பயணத் திட்டங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் தொலைபேசியில் ஆலோனை நடத்தியுள்ள நிலையில், குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisement