Connect with us
Friday, May 8, 2026
Home » ஜோதிடம் » 30 ஆண்டுகளுக்கு பின் உருவான யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை!
Advertisement

30 ஆண்டுகளுக்கு பின் உருவான யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை!

30 ஆண்டுகளுக்கு பின் உருவான யோகம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் காலப்போக்கில் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு, மற்ற கிரகங்களுடன் இணையும் போது பல்வேறு சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், மார்ச் 1ஆம் தேதி செல்வம், அழகு மற்றும் வளம் வழங்கும் கிரகமான சுக்கிரன், கட்டுப்பாடு மற்றும் கர்ம பலன்களை வழங்கும் சனிபகவானுடன் இணைந்து கேந்திர திரிகோண யோகத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த சிறப்பு யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக கூறப்படுகிறது.

இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மேஷம், கடகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சிறப்பான பலன்களை தரக்கூடும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டம் முழுமையாக துணை நிற்கும் நேரமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம் காணலாம்; புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வும் கிடைக்கலாம். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்; வாழ்க்கைத் துணையுடன் உறவு மேலும் வலுப்பெறும்.

மார்ச் 4, 2026:  அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் 6 ராசிகள்! சீன ஜோதிடம் சொல்வது என்ன?மார்ச் 4, 2026: அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் 6 ராசிகள்! சீன ஜோதிடம் சொல்வது என்ன?

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் காலமாக இது அமையும். வேலை பார்த்துவருபவர்களுக்கு சாதனை படைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் நினைப்பவர்களுக்கு இது சாதகமான சூழல். பூர்வீக சொத்துகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உறுதி.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சியின் கதவுகள் திறக்கும் காலமாக இந்த யோகம் அமையும். பணியிடத்தில் உயர்வு மற்றும் பாராட்டு கிடைக்கலாம். இதுவரை தடையாக இருந்தவர்கள் ஆதரவாளர்களாக மாறக்கூடும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். கடன் சுமைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துகள் வாங்கும் சாத்தியம் உருவாகலாம். குழந்தைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். நிதி நிலை மேம்பட்டு சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்.

குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையில் பகிரப்படுகின்றன. பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். ஜோதிட ஆலோசனைகளுக்காக நிபுணரை அணுகுவது நல்லது. இந்த தகவல்கள் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன.

புகழ்பெற்ற முன்கணிப்பாளர் பாபா வாங்கா – வாழ்க்கை வரலாறும் புகழின் பின்னணியும்புகழ்பெற்ற முன்கணிப்பாளர் பாபா வாங்கா – வாழ்க்கை வரலாறும் புகழின் பின்னணியும்

Advertisement
To Top