அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 4 கோடி மக்கள் எச்சரிக்கை வளையத்தில், 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

us weather

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மிகப்பெரிய பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமானதாக இந்தப் புயல் உள்ளதாக என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நியூயார்க், பாஸ்டன், ஃபிலடெல்பியா மற்றும் லாங் ஐலேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 4 கோடி மக்கள் ‘பிளிஸார்ட்’ (Blizzard) எனப்படும் கடும் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். மேலும், 1.9 கோடி மக்கள் குளிர்கால புயல் எச்சரிக்கையை எதிர்கொண்டு வருகின்றனர்.

நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெடிகட் ஆகிய மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, சில பகுதிகளில் 24 அங்குலம் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்காவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. FlightAware என்ற விமானக் கண்காணிப்பு இணையதளத்தின் தகவலின்படி, அமெரிக்காவிற்குள், அமெரிக்காவிலிருந்து வெளியே மற்றும் நாட்டிற்குள் செல்லவிருந்த 5,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று (23) ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாசசூசெட்ஸ், டெலாவேர் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net