புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்… கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா

கனடா

கடுமையான குற்றங்களில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்க புதிய மசோதா ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் அல்லது அதுகுறித்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

சமீபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பல் கார்னர் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சர்ரே நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மிரட்டி பணம் பறிக்கும் வழக்குகளில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட சிலர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தங்களை அகதிகளாக அறிவித்து பாதுகாப்பு கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட 14 பேரின் நாடுகடத்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கடுமையான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரும் வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படும். அதே நேரத்தில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நாடுகடத்தல் நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நடைமுறைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கம் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net