கனடா அரசு, Express Entry திட்டத்தின் கீழ் பிரெஞ்சு மொழி பேசும் திறன் கொண்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை (PR) பெற விண்ணப்பிக்க 8,500 பேருக்கு அழைப்பு வழங்கியுள்ளது. இந்த தகவலை Immigration, Refugees and Citizenship Canada (IRCC) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு French-language draw, 2026 பிப்ரவரி 3ஆம் தேதி காலை 11:11 (UTC)க்கு முன்பு Express Entry profile உருவாக்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 400 Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் குடியேற்ற மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கனடா அரசின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் கியூபெக் வெளியே குடியேற்றமானவர்களில் சுமார் 8.9 சதவீதம் பேர் பிரெஞ்சு மொழி பேசும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டில் 9 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாகவும், 2028ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாகவும் உயர்த்த அரசு இலக்குகள் நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்குகளை அடைய பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் Francophone Mobility work permit, Francophone Minority Community Student Pilot மற்றும் Welcoming Francophone Communities initiative ஆகியவை அடங்குகின்றன. மேலும், 2029ஆம் ஆண்டிற்குள் கியூபெக் வெளியே குடியேற்றப்படும் பிரெஞ்சு மொழி பேசுவோரின் விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.
2026ஆம் ஆண்டில் இதுவரை மொத்தமாக 24,178 அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் Canadian Experience Class மூலம் 14,000 பேருக்கும், French-language proficiency அடிப்படையில் 8,500 பேருக்கும், Provincial Nominee Program மூலம் 1,255 பேருக்கும் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, கனடாவின் பன்மொழி மற்றும் பன்முக குடியேற்றக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்





