அமெரிக்க குடிநுழைவு அதிகாரிகளுக்கு கட்டாய கேமரா – துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு நடவடிக்கை!

Mandatory body cameras for US immigration officers

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் பணியாற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகள் அனைவரும் இனிமேல் உடலில் அணியும் கேமரா பயன்படுத்த வேண்டும் என்று தாயகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு, ஜனநாயகக் கட்சியினர் காவல் நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் மத்திய அரசுக்கு வழங்கப்படும் நிதியை தடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய நடவடிக்கையை அறிவித்த தாயகப் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டி நோம், நாடு முழுவதும் மத்திய அதிகாரிகள் அனைவருக்கும் கேமரா பொருத்தப்படும் என தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அலெக்ஸ் பிரெட்டி துப்பாக்கியுடன் காவல்துறையினரிடம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சம்பவத்தை பதிவு செய்த காணொளிகளில் அவர் கையில் கைத்தொலைபேசி மட்டுமே இருந்தது போலத் தெரிகிறது. இதனால் இந்த சம்பவத்திற்கு குடிநுழைவுத் துறை பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net