மார்ச் மாதம் இந்தியா பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர் மார்க் கார்னி

கனடா பிரதமர்

Canada-வை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என Donald Trump தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதற்கு கனடா பிரதமர் Mark Carney கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக கனடா–அமெரிக்கா இடையிலான உறவுகள் சமீப காலமாக பதற்றமடைந்துள்ளன. மேலும், காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு கார்னிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றதும் கவனம் பெற்றது.

இந்தச் சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கனடாவுக்கான இந்திய தூதர் Dinesh Patnaik தெரிவித்துள்ளார். இந்தப் பயணம், இந்தியா–கனடா இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக அமையும் என அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தப் பயணத்தின் போது, சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குடன், அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளிலும், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net