டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக போதிய நேரமில்லை: ஷுப்மன் கில் அதிரடி பேச்சு

ஷுப்மன் கில்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சொந்த மண் டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக அணிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு வெள்ளைப் பந்து போட்டிகளில் ஈடுபட்ட அணி, உடனடியாக சிவப்புப் பந்து டெஸ்ட் தொடர்களுக்கு மாறியதால், வீரர்களுக்கு தயாராக போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று அவர் விளக்கினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கில், டி20 உலகக் கோப்பை அணியில் தனக்கு இடம் கிடைக்காத முடிவை மதிப்பதாகவும், அணி வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், விளையாட்டு வீரர்கள் எப்போதும் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதுவே வெற்றிக்கான வழியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கேப்டனாக இருந்து காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் இருப்பது மிகவும் கடினமான அனுபவம் என்றும், அணி வீரர்கள் அனைவரும் விளையாடும்போது கேப்டன் மட்டும் வெளியில் இருப்பது உணர்ச்சிபூர்வமான சவாலாக இருக்கும் என்றும் கில் தெரிவித்தார். ஒவ்வொரு தொடருக்கும் முன் குறிப்பிட்ட தயாரி காலம் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net