இன்னும் 3 ரன்கள் போதும்! நியூசிலாந்துக்கு எதிராக மாபெரும் சாதனையை நோக்கி ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான மூன்று வடிவ தொடரை முடித்துவிட்டு, இப்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான சவாலுக்குத் தயாராகிறது. ஜனவரி 11, 2026 முதல் தொடங்க இருக்கும் இந்த சுற்றுப்பயணத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இடம்பெற உள்ளன.

இந்தத் தொடருக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கேப்டனும், முன்னணி துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு பெரும் சாதனையை நோக்கி நகர இருக்கிறார். இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்கள், 5 அரைசதங்களுடன் 997 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில், 2017-இல் கான்பூரில் அடித்த 147 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர்.

இப்போது, வரவிருக்கும் தொடரில் மேலும் 3 ரன்கள் சேர்த்தால், நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைத் தாண்டும் முதல் இந்திய வீரராக ரோஹித் சர்மா வரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரை எழுதப்போகிறார். இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net