2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி பிற்பகுதியில், வானகத்தில் ஒரு 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு நிகழப் போகிறது – கும்ப ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய ஐந்து கிரகங்களும் ஒன்றாக இணைவது தான் அந்த அதிசயம். இந்த பஞ்சகிரக யோகம், ஜோதிட மரபில் மிகவும் சக்திவாய்ந்த யோகமாகக் கருதப்படுகிறது. இது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக ஐந்து ராசிகளுக்கு இது தங்கம் போல மதிப்புள்ள வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரப் போகிறது.
கும்பம் (Aquarius)
இந்த பஞ்சகிரக யோகம் உங்கள் ஜென்ம ராசியில் (1-வது வீடு) நடப்பதால், உங்கள் வாழ்க்கையில் தெளிவும், சக்தியும் பெருகும். நீண்ட நாட்களாக நிலவிய மனக் குழப்பங்கள் நீங்கி, உறுதியான முடிவுகள் எடுக்க முடியும். ராகு-சுக்கிரன் சேர்க்கையால், ஆடம்பரப் பொருட்கள், வசதிகள் மற்றும் தங்கம் வீட்டிற்குள் நுழையும். புதிய வீடு வாங்கும் ஆசை நிறைவேறப் போகிறது.
தனுசு (Sagittarius)
இந்த கிரக சேர்க்கை உங்கள் 3-வது வீடான வெற்றி ஸ்தானத்தில் நடக்கிறது. இதனால், உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடியும். சகோதரர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வணிகர்கள் எதிர்பாராத லாபம் மற்றும் திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவார்கள்.
மிதுனம் (Gemini)
பஞ்சகிரக யோகம் உங்கள் 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமைவதால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும். தடைபட்ட திருமணம், வெளிநாட்டு பயணம், உயர் கல்வி போன்ற சுப காரியங்கள் இப்போது முடிவுக்கு வரும். குடும்பத்தில் நிலவிய சச்சரவுகள் அமைதியாகி, மன அமைதி நிலவும்.
ரிஷபம் (Taurus)
இந்த யோகம் உங்கள் 10-வது வீடான கர்ம ஸ்தானத்தில் நடப்பதால், தொழில், பணி, மதிப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சமூக மரியாதை – அனைத்தும் நிச்சயம். சிறிய தொழில் நடத்திவருபவர்கள், தங்கள் தொழிலை விரிவாக்க வாய்ப்பு பெறுவீர்கள்.
மேஷம் (Aries)
இந்த ஐந்து கிரகங்களும் உங்கள் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் சேர்வதால், எதிர்பாராத பண வரவு உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக தடுமாறிய பணம் இப்போது கைக்கு வரும். தொழிலில் பெரிய விரிவாக்கம், புதிய முதலீடுகள் இரட்டிப்பு லாபம் தரும். உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும் காலம் இது.
முக்கிய குறிப்பு: இந்த பஞ்சகிரக யோகம் 2026 பிப்ரவரி பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. இது 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு அரிய ஜோதிட நிகழ்வு என்பதால், இதன் தாக்கம் ஆண்டு முழுவதும் நீடிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் ஜோதிட மரபு, பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை தகவல் மட்டுமே வழங்குவதற்காக உள்ளன.
மேலும் செய்திகள்





