2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? – பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்

2026 ஆம் ஆண்டு

இளவரசி டயானாவின் துயர மரணம், 9/11 தாக்குதல்கள், கோவிட்-19 பெருந்தொற்று போன்ற பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்ததாக கூறப்படும் பல்கேரிய முனிவி பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு குறித்தும் பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. போர்கள் நிறைந்த ஆண்டு

பாபா வங்கா, 2026 ஐ போர்கள் மற்றும் அரசியல் பிளவுகளின் ஆண்டாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஐரோப்பாவில் பரவலான மோதல்கள் ஏற்படலாம் என்றும், அவை வழக்கமான போர்களுக்கு அப்பால் நீண்டகால புவிஅரசியல் மாற்றங்களையும், உலக அரசியல் கூட்டணிகளின் மறுசீரமைப்பையும் ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளார். இந்த கணிப்புகள் தைவான், தெற்கு சீனக்கடல் மற்றும் சீன–இந்திய எல்லைப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.

2. மனித குலத்தை கட்டுப்படுத்தும் AI

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சி, அவர்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது தங்களது கட்டுப்பாட்டில் வைக்கவோ செய்யும் என்று பாபா கணித்துள்ளார். ரோபோக்கள் மட்டுமல்ல, AI மனிதர்களின் வேலைகள், உறவுகள் மற்றும் உயிர்களையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

3. ஏலியன்களுடன் முதல் தொடர்பு

2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மனித இனம் விண்வெளியிலிருந்து வரும் ஏலியன்களுடன் முதன்முறையாக தொடர்பு கொள்ளும் என்றும், ஒரு பெரிய விண்கலம் பூமியை நோக்கி வந்து தொடர்பு கொள்ளும் என்றும் பாபா கூறியுள்ளார். இது ஏற்கனவே வானியல் ஆய்வாளர்களால் கண்காணிக்கப்படும் ‘3I/ATLAS’ என்னும் மர்மமான விண்பொருளுடன் தொடர்புடையதாக ஊகிக்கப்படுகிறது.

4. இயற்கையின் கோபம்

பூமியின் பல பகுதிகள் அசாதாரண பருவநிலை மாற்றங்கள், நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை பேரழிவுகளால் தாக்கப்படும் என்று பாபா கணித்துள்ளார். இதன் விளைவாக, பூமியின் 7 முதல் 8 சதவீத பகுதி சேதமடையக்கூடும் என்றும், சூழல் மற்றும் உள்கட்டமைப்புகள் பெரும் அளவில் அழியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

5. உலக அரங்கத்தில் ரஷ்யாவின் எழுச்சி

2026 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து ஒரு தலைவர் உலக அரங்கில் முக்கிய பங்காற்றி, உலகத் தலைவராக உருவெடுப்பார் என்றும் பாபா கணித்துள்ளார்.

குறிப்பு: இந்தக் கணிப்புகள் பாபா வங்காவின் வார்த்தைகள் அல்லது அவரது பின்பற்றிகளால் பகிரப்பட்ட கூற்றுகள் ஆகும். இவை அறிவியல்பூர்வமான உண்மைகள் அல்ல அல்லது உறுதிப்படுத்தப்பட்ட எதிர்கால நிகழ்வுகளும் அல்ல. எனவே, இவை ஆர்வத்திற்காகவும், பொதுவான விவாதத்திற்காகவும் மட்டுமே கருதப்பட வேண்டும்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net