Connect with us
Monday, April 20, 2026

குடியுரிமை விதிகளில் பாரிய மாற்றம்! இன்ப அதிர்ச்சியை கொடுத்த கனடா! வெளியான தகவல்!

குடியுரிமை விதிகளில் பாரிய மாற்றம்

உலகம் முழுவதும் பல நாடுகள் குடியுரிமை தொடர்பான விதிகளை கடுமையாக்கி வரும் நிலையில், கனடா எதிர்பாராத வகையில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக பல ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினருக்கு பெரிய நிம்மதியையும், வாய்ப்பையும் அளிக்கப் போகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா நாடாளுமன்றத்தில் “மசோதா C-3” நிறைவேற்றப்பட்டது. இது குடியுரிமைச் சட்டத்தில் (2025) முக்கிய திருத்தம் செய்யும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், வெளிநாடுகளில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கனடா குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது.

குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டியாப் கூறுகையில், “இந்த மசோதா நீண்ட காலமாக நிலவிய சட்ட இடைவெளிகளை நிரப்புவதுடன், நவீன குடும்ப அமைப்புகளை மனதில் கொண்டு எதிர்காலத்திற்கான தெளிவான விதிகளை வகுக்கிறது. இது முந்தைய சட்டங்களால் புறக்கணிக்கப்பட்ட பலருக்கு குடியுரிமை வழங்கும்,” என்றார்.

கொழும்பில் வீடு வாங்குவது இனி கனவா? ஒரு மாத சம்பளத்தில் ஒரு சதுர அடி கூட முடியாத கொழும்பு!கொழும்பில் வீடு வாங்குவது இனி கனவா? ஒரு மாத சம்பளத்தில் ஒரு சதுர அடி கூட முடியாத கொழும்பு!

குடியுரிமை விதிகளில் பாரிய மாற்றம்

2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “முதல் தலைமுறை வரம்பு” (first-generation limit) விதியின்படி, குழந்தைகளுக்கு கனடா குடியுரிமை பெற அவர்களின் பெற்றோரில் குறைந்தது ஒருவர் கனடாவில் பிறந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், குடியுரிமை பெற்ற பெற்றோர் வெளிநாடுகளில் வாழ்ந்து அங்கே பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லாமல் போனது.

இந்த விதி 2023இல் கனடா நீதிமன்றத்தால் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டது. அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், புதிய சட்டத்தின் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடிவு செய்தது.

பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு எதிரொலி – கிரீன் கார்ட் லாட்டரி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு எதிரொலி – கிரீன் கார்ட் லாட்டரி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

புதிய விதிப்படி, வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு கனடா குடியுரிமை கிடைக்க, பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் குழந்தை பிறக்கும் முன்பு அல்லது தத்தெடுக்கப்படும் முன்பு 1,095 நாட்கள் (அதாவது 3 ஆண்டுகள்) கனடாவில் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மாற்றம் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது.

2026 ஜனவரி முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், குடியுரிமை பெற்றுவிட்டு இந்தியாவில் உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்து வரும் பல இந்தியர்களின் குழந்தைகள் பயன் பெறப் போகின்றனர். இந்த மாற்றம் பல ஆயிரம் குடும்பங்களுக்குப் பெரிய அளவில் நிம்மதியையும், எதிர்கால உத்தரவாதத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top