ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்

11 killed in shooting targeting Jewish community in Australia

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் பொலிஸ் காவலில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து சிட்னி நகரின் பொண்டாய் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் வர வேண்டாம் என சிட்னி பொலிஸார் தொடர்ந்து எச்சரித்துள்ளது.

சிட்னி பொலிஸார்

Advertisement