விராட் கோலி, ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க பி.சி.சி.ஐ. திட்டமிடுகிறதா?

விராட் கோலி ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க திட்டமிடுகிறதா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு கிரேடுகளில் பிரித்து ஒப்பந்தம் வழங்குகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ+ கிரேடில் உள்ளனர்.

சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர்கள் ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், இருவரையும் ஏ+ கிரேடில் இருந்து ஏ கிரேடுக்கு தரமிறக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ+ கிரேடில் உள்ளவர்களுக்கு ஆண்டு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. விராட் மற்றும் ரோகித் ஏ கிரேடுக்கு செல்லும் பட்சத்தில், அவர்களின் சம்பளம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக குறைய வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், ஜடேஜா டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், டெஸ்டில் விளையாடுவதால் ஏ+ கிரேடில் இருப்பார்.

இந்த ஒப்பந்த மாற்றம் 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.-ன் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம். மறுபுறம், மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில் ஏ+ கிரேடுக்கு முன்னேறுவதாக கூறப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net