Connect with us
Tuesday, April 21, 2026

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்; ரசிகர் வன்முறைக்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்; ரசிகர் வன்முறைக்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற கால்பந்து தொடர்பான நிகழ்ச்சியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான மெஸ்ஸி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் காணொளி மூலம் தனது உருவச் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். ஆனால், சில நிமிடங்களிலேயே மெஸ்ஸி நிகழ்ச்சியிடத்தை விட்டு வெளியேறியதால், அவரைக் காண வந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதன் பின்னர் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து, தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், மேடையை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மைதானப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்காளதேசத்தில் வன்முறை தீவிரம்: இளைஞர் கொலை – உடல் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்புவங்காளதேசத்தில் வன்முறை தீவிரம்: இளைஞர் கொலை – உடல் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு

ரசிகர்கள் தெரிவிப்பதாவது, மெஸ்ஸி மைதானத்தில் இருந்த குறுகிய நேரத்திலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை முழுமையாக சூழ்ந்திருந்ததால், அவரை சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதாகும். ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள், மெஸ்ஸி உடனடியாக வெளியேறியதால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தது அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், மெஸ்ஸியிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடா குடியேற்றத்தில் அதிரடி தீர்மானம்: இனி பெற்றோர் கனடாவுக்கு வர முடியாதா?கனடா குடியேற்றத்தில் அதிரடி தீர்மானம்: இனி பெற்றோர் கனடாவுக்கு வர முடியாதா?

மேலும், டிக்கெட்டுகளுக்காக செலுத்தப்பட்ட தொகையை ரசிகர்களுக்கு திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்; ரசிகர் வன்முறைக்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி

To Top