கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

கனடா அரசு, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் (Temporary Foreign Worker Program – TFWP) சார்ந்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் முக்கிய நோக்கம், உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதும், TFWP திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதும் ஆகும்.

அதன் ஒரு பகுதியாக, Wage Assessment (ஊதிய மதிப்பீடு) முறை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இனி அனைத்து வெளிநாட்டு தொழிலாளர் வேலை அனுமதி விண்ணப்பங்களும் Labour Market Impact Assessment (LMIA) அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

கனடாவில் வெளிநாட்டு
படம்: கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்

LMIA என்பது, Employment and Social Development Canada (ESDC) வழங்கும் ஒரு அங்கீகாரம். குறிப்பிட்ட பணிக்கு கனடியர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் கிடைக்கவில்லை என்பதை இந்த ஆவணம் உறுதிப்படுத்தும். LMIA கிடைத்த பின்னர் மட்டுமே, வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதி (Work Permit) பெற விண்ணப்பிக்க முடியும்.

புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்

Low-Wage stream-ல், வேலையில்லாதவர்களின் வீதம் 6% அல்லது அதற்கு மேல் உள்ள பிராந்தியங்களில் LMIA விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விதிவிலக்குகள்: விவசாயம், உணவு மற்றும் மீன் செயலாக்கம், கட்டுமானம், சுகாதார துறைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.

எந்த நிறுவனத்திலும் TFWP மூலம் நியமிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10% க்கு மேல் இருக்க முடியாது.

Low-Wage stream-ல் வேலை காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

LMIA-வின் செல்லுபடித் தன்மை 18 மாதங்களிலிருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கனடா அரசு, TFWP திட்டம் சில நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், உள்ளூர் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள், அத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவும், கனடிய தொழிலாளர் சந்தையைப் பாதுகாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த மாற்றங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் வேலை பெறுவதை இன்னும் சவாலாக்கும் என பலரும் கருதுகின்றனர்.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்