Connect with us
Wednesday, May 6, 2026
Home » இந்திய கிரிக்கெட் » “ஷமி எங்கே?” – ஹர்பஜன் சிங் கேள்வி; பிரசித் கிருஷ்ணாவை விட மோசமான பவுலரா ஷமி?
Advertisement

“ஷமி எங்கே?” – ஹர்பஜன் சிங் கேள்வி; பிரசித் கிருஷ்ணாவை விட மோசமான பவுலரா ஷமி?

ஷமி எங்கே

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இந்தப் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 359 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. இதில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த இலக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா 49.2 ஓவர்களில் இலக்கை அடைந்து, இந்தியாவின் பந்துவீச்சை முற்றிலும் சுமாராக்கியது.

குறிப்பாக, இந்திய பவுலர்களான ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் செயல்திறன் மிகவும் ஏமாற்றமளித்தது. பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், 8.2 ஓவர்களில் 85 ரன்கள் வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

15 வயது சிறுவனிடம் 31 வயது வீரரின் மல்லுக்கட்டு! – ஜேமிசனின் ‘செண்ட்-ஓஃப்’ சர்ச்சைக்குள்ளானது ஏன்?15 வயது சிறுவனிடம் 31 வயது வீரரின் மல்லுக்கட்டு! – ஜேமிசனின் ‘செண்ட்-ஓஃப்’ சர்ச்சைக்குள்ளானது ஏன்?

இந்த நிலையில், முன்னாள் இந்திய ஸ்பின் வீரர் ஹர்பஜன் சிங், கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்:

“பிரசித் கிருஷ்ணாவை விட முகமது ஷமி மோசமான பவுலரா?”

ஹர்பஜன் தனது விமர்சனத்தில், 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் களமிறங்கி, இந்தியாவை ஃபைனல் வரை தூக்கிச் சென்ற ஷமியின் பங்களிப்பை நினைவுபடுத்தினார். அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் சிறப்பாக செயல்பட்டு, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும், தற்போது தேர்வுக்குழு, ஷமி “ஃபிட்னஸ் பிரச்சினை” என்ற காரணத்தை முன்னிட்டு அவரை அணியில் இருந்து கழற்றி விட்டுள்ளது. ஆனால் ஷமி, ரஞ்சி கோப்பை, சயீத் முஸ்தாக் அலி டி20 போட்டி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி, தனது ஃபிட்னஸ் மற்றும் திறமையை நிரூபித்து வருகிறார்.

“இதற்கு மேல் விளையாட விரும்பல” – ஓய்வு குறித்து திடீரென பேசிய ரோஹித் சர்மா! நடந்தது என்ன?“இதற்கு மேல் விளையாட விரும்பல” – ஓய்வு குறித்து திடீரென பேசிய ரோஹித் சர்மா! நடந்தது என்ன?

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.”

“பிரசித் நல்ல பவுலர் என்றாலும், அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறார். நீங்கள் உங்கள் அனுபவம் வாய்ந்த, நம்பகமான பவுலர்களை மெதுவாக ஓரம் கட்டிவிடுகிறீர்கள்.”

“எங்கள் பவுலிங், ஜஸ்பிரீத் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் முற்றிலும் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே முகமது சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதேபோல் ஒரு கலவையை நீங்கள் உருவாக்க வேண்டும்.”

கம்பீரின் பதவிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் – என்ன செய்ய போகிறார்?கம்பீரின் பதவிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் – என்ன செய்ய போகிறார்?

ஹர்பஜனின் கருத்து, இந்திய பவுலிங் தரத்தையும், அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் இருந்து விலக்குவதையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஷமி போன்ற வீரர்களை புறக்கணிப்பது, புதிய வீரர்களின் செயல்திறன் மாறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அணிக்கு பெரும் இழப்பாக அமையும் என்பதை வலியுறுத்துகிறது.

Advertisement
To Top