அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தடை: டிரம்ப் நிர்வாகம் 19 நாடுகளுக்கு கடுமையான உத்தரவு!

அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தடை

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது அவரது நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்க மறுத்து, 19 நாடுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையின் கீழ், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு, பயங்கரவாத இணைப்புகள், அல்லது குடியேற்ற கண்காணிப்பு அமைப்புகளின் பற்றாக்குறை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்டுள்ள 19 நாடுகள்

  1. ஆப்கானிஸ்தான்
  2. மியன்மார்
  3. சாட்
  4. கொங்கோ குடியரசு
  5. ஈக்குவடோரியல் கினி
  6. எரித்ரியா
  7. ஹெயிட்டி
  8. ஈரான்
  9. லிபியா
  10. சோமாலியா
  11. சூடான்
  12. யேமன்
  13. புரூண்டி
  14. கியூபா
  15. லாவோஸ்
  16. சியெரா லியோன்
  17. டோகோ
  18. துர்க்மெனிஸ்தான்
  19. வெனிசுலா

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net