பணக்காரர்களுக்கு அதிக வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள தெளிவான முடிவு! நடந்தது என்ன?

பணக்காரர்களுக்கு அதிக வரி

சுவிட்சர்லாந்து மக்கள், பணக்கார வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மரபுரிமை வரி (Inheritance Tax) விதிக்கக் கூடாது என்று தெளிவான முடிவை எடுத்துள்ளனர்.

சமீபத்திய பொது வாக்கெடுப்பில், இடதுசாரி அமைப்பு ஒன்று முன்வைத்த 50% Inheritance Tax பிரேரணை மீது மக்கள் 78.3% எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம், இந்த பிரேரணை தோல்வியடைந்தது.

பிரேரணையின் நோக்கம், சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு கோடீஸ்வரர்களின் வெளிநாட்டுச் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கும் மரபுரிமை வரி விதிப்பதாக இருந்தது. ஆனால், இது நடைமுறையில் நாட்டின் பொருளாதார ஈர்ப்பையே பாதிக்கும் என்ற கவலை சுவிஸ் மக்களிடையே பரவியது.

உண்மையில், சுவிட்சர்லாந்து போன்ற வரி சலுகைகள் உள்ள நாடுகளுக்கு பணக்காரர்கள் வந்து குடியேறுவது வழக்கம். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள தங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் ஈட்டினாலும், அந்த வருமானத்திற்கு வாழும் நாட்டில் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? என்பது தான் சர்ச்சைக்குரிய புள்ளி.

பணக்காரர்கள் கூறுவது என்னவென்றால்:

“நாங்கள் வாழும் நாட்டில் ஏற்கனவே வரி செலுத்துகிறோம்; வெளிநாட்டு வருமானத்திற்கும் கூடுதலாக வரி செலுத்த வேண்டுமானால், வரி சுமை இல்லாத வேறு நாட்டுக்குச் சென்றுவிடுவோம்!”

இந்த அச்சம் சுவிஸ் அரசுக்கும் உண்டு. சுவிஸ் நிதி அமைச்சர் கரின் கெல்லர்-சட்டர் (Karin Keller-Sutter) கூறுகையில்:

“வெளிநாட்டவர்களுக்கு இப்படி ஒரு வரியை விதித்தால், நமது வரி அமைப்பு நடுநிலையற்றதாகி, சுவிட்சர்லாந்தின் மீதான அவர்களின் ஈர்ப்பு குறையும்” என்றார்.

முக்கியமாக, சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களில் எந்த ஒன்றும் இந்த Inheritance Tax பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net