டெட்ராய்ட் – உலகம் தற்போது போதைப்பொருள் கடத்தல், அரசியல் பதற்றம், காலநிலை மாற்றம் மற்றும் பல பிராந்திய மோதல்களின் நடுவே சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில், எலான் மஸ்க் – டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) ஆகியவற்றின் தொழிலதிபர் – “2030-க்குள் உலகப்போர் நிச்சயம் நடக்கும்” என அதிரடியாக எச்சரித்துள்ளார்.
டிசம்பர் 1, 2024 அன்று, ஒரு எக்ஸ் பயனர் (@ArtemisConsort) பகிர்ந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மஸ்க் கூறியது:
“போர் தவிர்க்க முடியாதது. அது இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும் – அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள். 2030-க்குள் நடக்கும்.”
இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் ஈர்த்துள்ளது.
மஸ்க் தனது கருத்துக்கு காரணத்தை விரிவாக விளக்கவில்லை என்றாலும், பயனர்கள் அதை உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், சீனா-தைவான் பதற்றம், அமெரிக்காவின் வெனிசுவலா தொடர்பான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுடன் இணைத்து விவாதித்து வருகின்றனர்.
மேலும், “எலான் ஏன் 2030 என்று குறிப்பிட்டார்? AI போரா? காலநிலை போரா? அல்லது டிரம்பின் DOGE பணியுடன் இதற்கு தொடர்பு உண்டா?”
என்ற கேள்விகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
சமீபத்தில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசில், மஸ்க் DOGE (Department of Government Efficiency) என்ற புதிய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு, அரசு செலவுகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த பின்னணியில், அவரது போர் குறித்த எச்சரிக்கை, அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மஸ்க் முன்பே கூறியது போல, “மனித இனம் பூமியில் மட்டும் இருந்தால் ஆபத்து. பல கிரகங்களில் வாழ வேண்டும்” என்பது அவரது தொலைநோக்கு திட்டம். இந்த எச்சரிக்கையும் அந்த நோக்கத்தோடு இணைந்ததாகத் தோன்றுகிறது.
அவரது இந்த பகிர்வு, போர் தவிர்க்க முடியாதது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவது மட்டுமல்லாமல், உலக அரசுகள் தங்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை தயார்நிலைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதையும் ஊட்டியாக எடுத்துரைக்கிறது.



