உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார்? — சச்சினா, கோலியா? கவாஸ்கர் கூறிய பதில்

உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார்

உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் — சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது பதிலை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52வது ODI சதத்தை பதிவு செய்தார். இதனால் ஒரே வடிவில் அதிக சதங்கள் வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் அடித்திருந்த சச்சினின் சாதனையையும் அவர் மீண்டுள்ளார்.

ஓர்நாள் கிரிக்கெட்டில் சச்சின் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில், 37 வயதான கோலி அதனை ஏற்கனவே முந்தி சாதனைப் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

இதனால் “சச்சினா சிறந்தவர்? கோலியா சிறந்தவர்?” என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் பேசிய கவாஸ்கர், “விராட் கோலியுடன் விளையாடியவர்களும், அவருக்கு எதிராக விளையாடியவர்களும், ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ரிக்கி பாண்டிங் கூட கோலியை எல்லா காலத்திற்குமான சிறந்த ODI பேட்ஸ்மேனாக மதிப்பார். அவுஸ்திரேலியர்களிடமிருந்து இவ்வாறு பாராட்டு பெறுவது மிகக் கடினம். சச்சினை முந்திவிட்ட நிலையில், விராட் கோலி எங்கு நிற்கிறார் என்பது அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது,” என்று கூறினார்.

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net