கோலி – ரோஹித் ஜோடி சாதனை: சங்ககாரா–தில்ஷன் ரெக்கார்டை சமன் செய்த கூட்டணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஜோடி, ஒருநாள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை சாத்தியமாக்கினர்.

போட்டியில் விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் இடம்பெற்றன. ரோஹித் ஷர்மா 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 109 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தனர்.

இந்த கூட்டணியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 20 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனையை கோலி–ரோஹித் ஜோடி உருவாக்கியது. இதனால், குமார் சங்ககாரா – தில்ஷன் ஜோடி வைத்திருந்த சாதனையை இவர்கள் சமன் செய்துள்ளனர்.

இதே நேரத்தில், இந்திய அணிக்குள் 100+ ரன்கள் கூட்டணியில், ரோஹித் – கோலி ஜோடி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடம் 26 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி ஜோடிக்குச் சொந்தமானது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net