கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நாகேஷ்வர், அதே கல்லூரியில் படித்த மாணவியை நட்பாகப் பழகி, பின்னர் ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவியை இந்த விஷயத்தை யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நாகேஷ்வர், அவரை 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
தொடர் மிரட்டலைத் தாங்க முடியாமல், மாணவி இறுதியாக தனது பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்து கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, நாகேஷ்வரை கைது செய்தனர். அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
