ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிப் பெற்றதை அடுத்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித்துக்கும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் உள்ள வயது வித்தியாசம் 22 என்பதுடன், நவம்பர் மாதம் தான் அஜித் படப்பிடிப்புக்கு தேதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் ஏனைய காட்சிகளை படமாக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.