நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’ரிவால்வர் ரீட்டா’ படமானது கடந்த ஆண்டே ரிலீஸுக்குத் தயாரானது. இந்த நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்துரு இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘ரீட்டா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன், சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த படம் அவருக்கு இன்னொரு வெற்றிப் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.