இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி – ரவி சாஸ்திரியின் பிளேயிங் லெவன்

இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி

9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்று முடிவடைந்து, அரைஇறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை துபாயில் நடைபெறும் முதல் அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் மேலாளருமான ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். அவரது கூற்றுப்படி, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்கள் இந்த ஆட்டத்திலும் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்)

சுப்மன் கில்

விராட் கோலி

ஸ்ரேயாஸ் ஐயர்

கே.எல். ராகுல்

ரவீந்திர ஜடேஜா

ஹர்திக் பாண்ட்யா

அக்சர் படேல்

குல்தீப் யாதவ்

முகமது ஷமி

வருண் சக்ரவர்த்தி

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net