Wednesday, July 23, 2025

Top 5 This Week

Related Posts

ரச்சிதாவின் மொத்த மானத்தையும் வாங்கிய ஒரே ஒரு பாடல்… விளாசும் நெட்டிசன்ஸ்!

சீரியலில் அழகு பதுமையாக புடவை கட்டிக்கொண்டு அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் சீரியலில் நடித்து கொண்டு இருந்த போதே, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனார், அந்த வீட்டில் எப்போதும் புடவையில் வலம் வந்த ரச்சித்தா மகாலட்சுமிக்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரச்சித்தா, இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரச்சிதா மகாலட்சுமி

இந்த படத்தில் இருந்து, மெதுமெதுவாய் என்கிற பாடலின் டிரைலர் வெளியானதுடன், அதில் ரச்சித்தா மகாலட்சுமி, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு இருக்க, பாலாஜி முருகதாஸ் அவரை கண்ட இடத்தில் தொடுவது போல காட்சி இருந்தது.

படுக்கையறை காட்சி தொடர்பில் நடிகை ரச்சிதா விளக்கம்

தொடர்ந்து ஃபயர் படத்தில் இருந்து, மெதுமெதுவாய் பாடலின் முழு வீடியோ வெளியானது. அதில் ரச்சித்தா, சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி பாலாஜியுடன் நடனமாடுகின்றார்.

பின்னர், முட்டி வரை சேலையை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்று, பின் சட்டை மட்டுமே அணிந்து இருக்க, பாலா அவரை கட்டிப்பிடித்து, கண்ட இடத்தில் தொடும் காட்சி அப்பட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பட வாய்ப்புக்காக ரச்சித்தா இப்படி நடித்து இருக்கக்கூடாது என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles