நிலநடுக்கத்தில் 1 வயது மகளை காப்பாற்றி உயிர்நீத்த கால்பந்து வீரரின் மனைவி… நெகிழ்ச்சியில் வெனிசுலா

பகிர்
விளம்பரம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், தனது 1 வயது மகளை காப்பாற்றிய தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியதாக கூறப்படுகிறது. இந்த பேரிடரால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஏராளமான உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன.

கால்பந்து வீரரின் மனைவி
படம்: நிலநடுக்கத்தில் 1 வயது மகளை காப்பாற்றி உயிர்நீத்த கால்பந்து வீரரின் மனைவி… நெகிழ்ச்சியில் வெனிசுலா

இந்த சோகச் சம்பவத்தில், வெனிசுலா கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் குடும்பமும் பாதிக்கப்பட்டது. மார்டினோ டி லா குயர் கிளப்புக்காக விளையாடிய ஹெக்டர் பிலோவின் மனைவி அண்ட்ரியா மற்றும் அவர்களின் ஒரு வயது மகள் அலனா, நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீட்டில் இருந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வீடு இடிந்து விழுந்தபோது, தனது மகள் அலனாவை பாதுகாப்பாக காப்பாற்ற அண்ட்ரியா முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தியாகத்தால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாலும், அண்ட்ரியா இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயின் உயிர்தியாகத்தால் ஒரு வயது குழந்தை உயிர் தப்பிய இந்த சம்பவம் வெனிசுலா மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்