ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!

ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் அன்பின் காரணியாக விளங்குபவர் சுக்கிரன் பகவான். சுக்கிரன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். அந்த வகையில், ஜூன் 8-ம் தேதி சுக்கிரன் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.

ஏற்கனவே கடக ராசியில் சுபகிரகமான குரு பகவான் உச்ச நிலையில் அமர்ந்திருப்பதால், ஜூன் 8 முதல் ஜூலை 4 வரை ‘கஜலட்சுமி ராஜயோகம்’ உருவாகிறது. 2026 ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அபூர்வ கிரகசேர்க்கையால், அடுத்த ஒரு மாத காலத்தில் நான்கு ராசிகள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் அசுர வளர்ச்சியைப் பெறப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் மேஷம், மிதுனம், கடகம் மற்றும் விருச்சிகம்.

மேஷ ராசி

முதல் ராசியான மேஷத்துக்கு, நான்காவது இடத்தில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நீண்ட நாள் கனவான புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் புதிய வாய்ப்புகளைக் காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, வெளிநாடு செல்லும் கனவும் நனவாகும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று அரிசி, சர்க்கரை போன்ற வெள்ளை நிறப் பொருட்களைத் தானம் செய்து வழிபடுவது மேஷ ராசிக்காரர்களுக்கு மேலும் நன்மைகளைத் தரும்.

மிதுன ராசி

இரண்டாவதாக, மிதுன ராசிக்கு இரண்டாம் வீடான செல்வ ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால், பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. புதிய லாப வழிகள் உருவாகி வருமானம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் தொடங்க இதுவே மிகச் சிறந்த காலகட்டம். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும்; சமூகத்தில் மரியாதை கூடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுவதோடு, நிதி நெருக்கடி தீர வெள்ளிக்கிழமை அன்று இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.

கடக ராசி

மூன்றாவதாக, கடக ராசிக்கு, சுக்கிரன் நேரடியாக ராசிக்குள்ளேயே நுழைவதால், கஜலட்சுமி யோகத்தின் முழுப் பலன்களையும் கடக ராசிக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நிதிப் பிரச்சினைகள் மற்றும் கடன்கள் முற்றிலும் தீரும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும். உடல்நிலையிலும் முன்னேற்றம் இருக்கும். செல்வ வளம் பெருகவும், லட்சுமி தேவியின் அருளைப் பெறவும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி

நான்காவதாக, விருச்சிக ராசிக்கு, ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், அதிர்ஷ்டக் காற்று விருச்சிக ராசிக்காரர்களின் பக்கம் வீசத் தொடங்கும். அவர்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்சினைகள் தீரும். நிதி நிலைமை படிப்படியாக அசுர வளர்ச்சி அடையும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவார்கள். வேலை இல்லாமல் திண்டாடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், புதிய பொறுப்புகளும் தேடி வரும். மாணவர்கள் உயர்கல்வியில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவோடு குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வார்கள். தினமும் ‘ஓம் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதும், வெள்ளிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அரிசி, தயிர் அல்லது சர்க்கரை தானம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்ட பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஊடகமாக மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம். வாசகர்கள் இந்தத் தகவல்களை வெறும் தகவலாக மட்டுமே கருத வேண்டும். எந்தவொரு ஜோதிட நடைமுறைகளையும் பின்பற்றுவதற்கு முன், சான்றளிக்கப்பட்ட ஜோதிடரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net