வீட்டில் பணம் கரைந்து கொண்டே இருக்கிறதே என்ற கவலை உங்களுக்கு இருந்தால், முதலில் உங்கள் சமையலறை மற்றும் குளியலறை குழாய்களை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் சமநிலை நம் வாழ்விடத்தில் சீராக இருந்தால்தான் நேர்மறை ஆற்றல் தங்கும் என்பது வாஸ்துவின் அடிப்படை. அந்தச் சமநிலையைச் சிதைக்கும் முதன்மையான தவறு, வீட்டில் உள்ள குழாய்களிலிருந்து தண்ணீர் கசிவதாகும். இது ஒட்டுமொத்த வளர்ச்சியையும் முடக்கிப் போடும் அசுப அறிகுறியாக வாஸ்து நூல்கள் குறிப்பிடுகின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, குழாயிலிருந்து மீண்டும் மீண்டும் ஒரு துளி நீர் விழுந்தால்கூட, அது நிதிப் பிரச்சனைகளை அழைத்து வரும். வீட்டில் எந்த அளவுக்குத் தண்ணீர் விரயமாகிறதோ, அதே விகிதத்தில் செலவுகள் பெருகி சேமிப்பு வெளியேறும். `ஒரு துளி நீர் 100 ரூபாய்க்குச் சமம்’ என்று வாஸ்து வல்லுநர்கள் எச்சரிப்பதன் பொருள், சொட்டுச் சொட்டாக வீணாகும் நீர், நம் கண் முன்னே தெரியாமலேயே பெரும் பொருளாதார நஷ்டத்தை உருவாக்கும் என்பதே. நிதி நெருக்கடி மட்டுமின்றி, இந்தக் கசிவு குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறுகளையும் உண்டாக்கும்.
எனவே, எதிர்பாராமல் பணத்தட்டுப்பாடு, தொடர் செலவுகள், உடல்நலச் சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொள்பவர்கள், தாமதமின்றி வீட்டின் ஒவ்வொரு குழாயையும் பரிசோதித்து, கசிவுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். கசியும் தண்ணீரை நிறுத்துவது, குடும்பத்தின் செல்வ வரவை நிலைநிறுத்தவும், நேர்மறை ஆற்றலைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும்.
மேலும் செய்திகள்




