ஜோதிடத்தில் நவகிரகங்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, கல்வி, குழந்தைகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை குறிக்கும் இவர் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றமும், சுமார் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மாற்றமும் மேற்கொள்வார்.
தற்போது மிதுன ராசியில் உள்ள புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு, தனது சொந்த நட்சத்திரத்தில் இருப்பது ஒரு சிறப்பான நிலையில் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைகிறார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் காலமாக பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகள், முன்னேற்றம் மற்றும் நன்மைகள் அதிகரிக்கும் நேரமாக இது அமையலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலும் வியாபாரமும் முன்னேற்றம் காணும். நீண்டநாள் சிக்கல்கள் சரியாகி, வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும். கடன் சுமைகள் குறையும் மற்றும் புதிய சொத்து வாங்கும் வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்டகால பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் மேம்படும். உறவுகள் வலுப்பெறும் மற்றும் புதிய ஆரம்பங்களுக்கு நல்ல சூழல் உருவாகும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் நிகழலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலை சீராகி, மன அமைதி அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு தைரியமான முடிவுகளை எடுப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானமும் உயரக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, வருமானம் பல்வேறு வழிகளில் அதிகரிக்கும். நீண்டநாள் உழைப்புக்கான பலன் கிடைத்து, குடும்ப நிதிநிலை மேம்படும்.
இந்த தகவல்கள் பாரம்பரிய ஜோதிடக் கருத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதனை முழுமையான உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகளாக எடுத்துக்கொள்ளாமல், தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.



