2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராசிபலன்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ‘பராபவ’ ஆண்டாகக் கருதப்படுவதுடன், குரு, சனி, ராகு, கேது போன்ற முக்கிய கிரகங்கள் சுப நிலைகளில் பயணிப்பது ஜோதிட ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இந்த மாற்றங்கள் பல ராசிகளுக்கு பலன்களை அளித்தாலும், குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமையும் என கூறப்படுகிறது.
ஜோதிட கணிப்புகளின்படி, ரிஷப ராசியில் குரு 3ஆம் இடத்திலும், சனி 11ஆம் இடமான லாப ஸ்தானத்திலும் இருப்பது பெரும் நிதி முன்னேற்றத்தை தரும் அமைப்பாக பார்க்கப்படுகிறது.
இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறும் காலகட்டமாக இது அமையும் என கணிக்கப்படுகிறது.
மேலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாற்றங்கள் காத்திருக்கின்றன. கடந்த கால அனுபவங்களால் திருமணம் அல்லது காதல் குறித்து தயக்கத்தில் இருந்தவர்களுக்கு, இந்த ஆண்டு நல்ல இணை அமையும் வாய்ப்பு அதிகம்.
திருமண யோகம் பலருக்கும் உருவாகும் எனவும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் எனவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், 2026 தமிழ் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ‘ஜாக்பாட் ஆண்டு’ எனவே சொல்லலாம். பணவரவு, உறவுகள், தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதை முழுமையான உண்மையாகக் கருதாமல், தகவல் நோக்கத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்





