செவ்வாய் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் காலம்!

செவ்வாய் நட்சத்திர மாற்றம்

வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் நட்சத்திர மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், செவ்வாய் கிரகம் ஏப்ரல் 6ஆம் தேதி சனி ஆளும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து ஏப்ரல் 24 வரை அங்கேயே நிலைபெறுகிறது.

ஆற்றல், துணிச்சல் மற்றும் செயல்திறனை குறிக்கும் இந்த கிரகத்தின் மாற்றம், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தையும் நிதி வளர்ச்சியையும் அளிக்கும் காலமாக பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைப்பதோடு, சேமிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் அமைதியான சூழல் நிலவும், பணியிடத்தில் பாராட்டுகளும் கிடைக்கக்கூடும்.

அதேபோல் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல நல்ல மாற்றங்கள் நிகழலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் பெரிய வெற்றிகளையும் நிதி ஆதாயங்களையும் தரக்கூடியதாக அமையும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக இருக்கும் சூழல் உருவாகும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும் வாய்ப்பும் உள்ளது.

அதே நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு, புதிய வாய்ப்புகள் மற்றும் குடும்பத்தில் நல்லிணக்கம் போன்ற பல நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.

மொத்தத்தில், இந்த செவ்வாய் நட்சத்திர மாற்றம் சில ராசிகளுக்கு முன்னேற்றம் தரும் காலமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால், இதனை பொதுவான கணிப்பாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இது உறுதியான ஆலோசனை அல்ல. முக்கிய முடிவுகளுக்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net