மார்ச் 15 முதல் சூரியன் மீன ராசியில் நுழைவு: இந்த 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையா இருக்கணும்

சூரியன் மீன ராசியில் நுழைவு

ஜோதிடத்தில் சூரியன் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவதால், அந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பார்க்கப்படும். தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார், ஆனால் மார்ச் 15 முதல் மீன ராசியில் நுழையவுள்ளார். மீன ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால், சூரியன் சுமார் 12 மாதங்களுக்கு பிறகு மீன ராசிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

சூரியன் மீன ராசியில் செல்லும் போது சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறலாம், ஆனால் சிலர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் 15 முதல் சூரிய பெயர்ச்சி காரணமாக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

கன்னி

7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது, கூட்டு தொழிலில் ஈடுபட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் நற்பெயர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

கும்பம்

2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரித்து, சேமிப்பு பணம் குறையும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

சிம்மம்

8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லும் போது சோதனை காலம் தொடங்கும். முயற்சிகளில் வெற்றி தாமதமாகும். தன்னம்பிக்கை குறையும். பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை யாருக்கும் பகிராதீர்கள்; குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபரை தலையிடவிடாதீர்கள்.

மீனம்

முதல் வீட்டிற்கு சூரியன் செல்லும் போது மன அழுத்தங்கள் அதிகரிக்கும். தேவையற்ற கோபம் உறவுகளில் விரிசல் ஏற்படுத்தலாம். ஆரோக்கிய பிரச்சனைகள் – கண் பிரச்சனை, தலைவலி, உடல் சூடு – ஏற்படலாம். அரசு மற்றும் அதிகாரப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலே உள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் துல்லியம், நம்பகத்தன்மைக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தகவலை வெறும் அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். எந்தவொரு நடவடிக்கையையும் முன் எடுக்க முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net